அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்.31க்கு ஒத்திவைத்தது சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம். கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் […]
இன்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை […]
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக பாஜக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக விளங்கிய அதிமுக விலகியது பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் ஓர் பாதிப்பாக பேசப்பட்டாலும், பாஜகவினரின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று இருந்தார். அங்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இன்று சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கட்சி விஷயமாக அண்ணாமலை டெல்லி சென்றிருந்ததால் ஆலோசனை கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் அறிக்கை குறித்து அண்ணாமலை அவர்கள், பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். அதன்பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்று அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து […]
இன்று வள்ளலாரின் 200வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை) வள்ளலாரின் சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலாரின் சிலையை திறந்து வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவை காணொளி வாயிலாக கண்டு உரையாற்றினார். அப்போது அவர் வள்ளலாரின் பெருமைகளை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை மக்களிடம் தெரிவித்தார். அதில், தற்போதைய நவீன கல்விதித்திட்டத்திற்கு வள்ளலாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளதற்க்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் இந்தியத் தொகுதித் தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும். எதிர்க்கட்சித் தலைவர்களை […]
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை செய்து வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்றும், வேலைக்கேற்ற சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் நேற்று தெரிவித்த […]
நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இந்த விபத்தின் போது வீட்டில் இருந்த பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தானது சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதின் காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக […]
ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும், வேலைக்கேற்ற உரிய ஊதியம், வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2,500 வரையில் தொகுப்பூதியம் உயர்த்தி […]
அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர் விமர்னங்களை கூறி வந்ததை அடுத்து , அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடி கலந்தாலோசித்து இனி , அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்றும் , தேசிய அளவிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்தும் அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்த முடிவை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்து இருந்தாலும், அடுத்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை உறுதியாக […]
சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை அடையாறில் உள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோன்று, தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி, மேலும் ஜெகத்ரட்சகனுக் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் வருமான […]
டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது. அந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கின் கீழ், டெல்லி சிறப்பு காவல் பிரிவினர், சட்டவிரோத செயல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் டெல்லி நியூஸ் கிளிக் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று மதியம் […]
சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு, வானவேடிக்கை வெடிகளை தயார் செய்து வருகிறார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார். இன்றும் அதே போல தில்லையாடியில் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருக்கும் போது, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உடல் […]