#Breaking: தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா உறுதி.! ஒருவர் பலி.!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 23-ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 23-ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1821-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 94 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 960 பேர் வீடு திரும்பியுள்ளார்கள்.

இன்று மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 43 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 495-ஆக உயர்ந்துள்ளது.