திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 107 பேர் கைது: 89 பைக்குகள் பறிமுதல்

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவினை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 89 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.