11 தமிழக மீனவர்கள் விடுதலை.! ஒருவருக்கு 14 மாதம் சிறை.! இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் விடுதலை எனவும், ஒருவருக்கு 14 மாதம் சிறை தண்டனை எனவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் விடுதலை எனவும், ஒருவருக்கு 14 மாதம் சிறை தண்டனை எனவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. பின்னர் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளை அடுத்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், படகுகள் அரசுடைமையாக்கப்பட்டு விடுகிறது.

இலங்கை கடற்படை கைது :

கடந்த மாதம் 23ஆம் புதுகோட்டை மாவட்டம், ஜெகதாம்பட்டினம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது, அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

11 பேர் விடுதலை :

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்த பிறகு இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், 11 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுவித்தது.

14 மாதம் சிறை :

ஒரே ஒரு மீனவர் மட்டும் இதற்கு முன்னர் இதே போல எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு மீண்டும் வந்தால் கடுமையான தண்டனை இருக்கும் என கூறியும் மீண்டும் மீன்பிடிக்க வந்ததால், அவருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படகு அரசுடமை :

வழக்கம் போல, மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் சென்ற படகு அரசுடைமையாக்கப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.