"தாயார் திட்டியதால் தீக்குளித்து மாணவி தற்கொலை"..!பிஞ்சுகளின் மனதில் ஏன் இந்த நஞ்சு..???

தேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கெங்கவல்லி பேரூராட்சி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மந்திரி, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுடைய மகள் பிரியதர்ஷினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதுநேற்று முன்தினம் இவர் வீட்டில் டி.வி. பார்த்துள்ளார்.

unknown node

அப்போது அவரது தாயார், காலாண்டு தேர்வு நடைபெறுகிறது எனவே டி.வி. பார்க்காமல், படிக்குமாறு மகளிடம் கூறியுள்ளார்.இதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அதில் இருந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரியதர்ஷினி நேற்று இறந்தார்.இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

unknown node

தன் தாய் அறிவுறை தான் கூறுகிறார் என்று கூட தெரியாத அளவிற்கு அவரின் கண்ணை மறைத்தது ஆத்திரமா..?அல்லது சினிமாவா..?இல்லை புரியாத மனநிலையா..??இப்பொழுது உள்ள தலைமுறைக்கு பிரச்சணைகளை கையாள தெரியாமல் எத்தனையோ பிரியதர்ஷினிக்கள் இருக்கின்றனர் என்பது தான் வேதனையாக உள்ளது.

unknown node

குழந்தைகளின் வாழ்க்கை ஒரு அற்புதமான ஒன்று பொற்றோர் அதில் வாழவும் சாதிக்கவும் கற்று தர வேண்டும் அவர்களை அணுவளவும் புரிந்து வைத்திருக்க வேண்டும் பிரச்சணைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது நமது கடமையாகும்.

DINASUVADU