நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை..!தமிழக காங்கிரஸ் தலைவர்

நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, இங்கு எப்படி மலரும்? என்று தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, இங்கு எப்படி மலரும்? என்று தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர் . ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது .பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான்.அதேபோல் பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது .காங்கிரஸ்  மன்னிப்பு கேட்க வேண்டுமென, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஏமாற்றத்தின் விரக்தியில் பேசுகிறார்.வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது, நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும் என்றும் தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.