திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களேடைய அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும். இந்நிலையில், இன்று கல்லூரி நுழைவு வாயில் முன்பாக இருதப்பினரை சேர்ந்த மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
பாட்டில், கட்டைகள், மற்றும் கற்களை கொண்டு இருவரும் மோதிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 18 மாணவர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 15 மாணவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
unknown nodeசம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மோதலில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களேடையே நடந்த இந்த மோதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.