தமிழகத்தில் கொரோனாவால் இன்று 16 பேர் உயிரிழப்பு.!

In Tamil Nadu today, 1,312 people confirmed to have corona infection in a single day a total of 7,91,552 people affected in Tamil Nadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,312 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி, 16 பேர் பலியாகியுள்ளனர்.
பாதிப்பு நிலவரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,312 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,91,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 307 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,17,850 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள்:88

தமிழகத்தில், கொரோனாவால் இன்று 16 பேர் பலியாகியுள்ளனர். அதில், 9 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள்:

கொரோனாவில் இருந்து இன்று 1,389 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 7,69,048 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாதிரிகள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64,010 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,25,40,103 -ஐ கடந்துள்ளது.