"தமிழகம் முழுவதும் 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன"- தலைமை தேர்தல் அதிகாரி!

Chief Electoral Officer Satyaprada Sahu has said that 174 voting machines have been replaced due to disruption across Tamil Nadu.

தமிழகம் முழுவதும் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பேட்டியளித்துள்ளார்.