சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினம் – கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்..!

தூத்துக்குடியில், சுனாமி பேரலை தாக்கிய 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடியில், சுனாமி பேரலை தாக்கிய 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலை தமிழகத்தை தாக்கியது. இந்த சுனாமி தாக்குதல் பலர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது உறவுகளையும் உடைமைகளையும் இழந்தனர்.

இந்த நிலையில், சுனாமி பேரலை தாக்கிய 18-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தூத்துக்குடியில், சுனாமி பேரலை தாக்கிய 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.