கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 900-க்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்  42  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்துள்ளனர் .அமெரிக்காவிலிருந்து திரும்பிய இருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளனர்.மேலும் வீடு திரும்பிய இருவரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.