சென்னையில் இதுவரை 22 காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுளளது.!

சென்னையில் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் மக்களுடன் நேரடி தொடர்பில் வேலைபார்த்து வருபவர்கள் காவலர்கள். அவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை சென்னையில் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுளளது.