காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிலிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து குறிப்பிட்ட மாணவிகள் கால்பந்தாட்ட போட்டிக்காக இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகிய ஆசிரியர்கள் தலைமையில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதிக்கு போட்டிக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
நேற்று, ஒரு போட்டியில் விளையாடிய நிலையில், இன்று அந்த மாணவிகளை திலகவதி மற்றும் இப்ராஹிம் ஆகிய ஆசிரியர்கள் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி கரையோர ஆற்றங்கரைக்கு குளிக்க அழைத்து சென்றதாக தெரிகிறது. அப்போது, நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ஆசிரியர்கள் இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோரையும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டு மணியையும் கல்வித்துறை அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.