தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் ...!

3 special trains will be operated for the convenience of passengers ahead of Diwali.

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் பயண சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி தாம்பரம் முதல் நாகர்கோவில், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் முதல் சந்ரகாட்சி ஆகிய பகுதிகளுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பயணிகளின் தேவை அதிகம் இருப்பின் கூடுதல் ரயில் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.