டாஸ்மார்க் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

30,000 crore revenue through Tasmark - Finance Secretary Krishnan informed

தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும்.கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை.

தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02%ஆக இருக்கும்.2020-21 ஆண்டில் டாஸ்மார்க் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.தமிழக அரசு அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவு குறையும்.தேசிய அளவில் 7% பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.