திருநெல்வேலியில் முக கவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்..!

Police in Tirunelveli district have registered a case against 39 persons for violating curfew and confiscated 41 vehicles.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்டிருந்த ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொது இடங்களில் முககவசம் அணியாத 338 பேர், மற்றும்  சமூக இடைவெளியை பின்பற்றாத 18 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.