மதுரை, அலங்காநல்லூரில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறைத்து, அவரை கத்தியால் குத்திஅவரிடமிருந்த 34 ஆயிர ரூபாய் பணம் மற்றும் வாகனத்தை வழிப்பறி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்தவர் நேசபாலன். இவர் வேலை முடிந்ததும் நேற்று இரவு அலங்காநல்லூர் சாலை உள்ள சிக்கந்தர்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழிமறைத்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்த 34,000 ரூபாய் பணம் மற்றும் அவரின் வாகனத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பியோடினர்.
இந்நிலையில், ரத்த காயங்களுடன் சாலையில் நடமாடி கொண்டிருந்த அவரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…