தமிழகம் முழுவதும் கஜா புயலுக்கு 20 ஆண்கள், 14 பெண்கள், 2 குழந்தைகள் என 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.கஜா புயல் தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது.
unknown nodeஇந்நிலையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கஜா புயலுக்கு தமிழகம் முழுவதும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கஜா புயலுக்கு 20 ஆண்கள், 14 பெண்கள், 2 குழந்தைகள் என 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் – 12 பேர் , புதுக்கோட்டை – 7பேர் , தஞ்சை – 4 பேர் , நாகை – 4 பேர் , கடலூர் – 3 பேர் , திருச்சி – 2 பேர் , திண்டுக்கல் – 2 பேர் , சிவகங்கை – 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புயலில் தாக்கம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.