4 நாட்களாக நடந்த சோதனை...மின்வாரிய அதிகாரிகள் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்.!!

மின்வாரிய அதிகாரிகள் சிலரது வீடுகளில் அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 360 கோடி வங்கி டெபாசிட் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது

tamil nadu minsara variyam

மின்வாரிய அதிகாரிகள்சிலரது வீடுகளில் அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 360 கோடி வங்கி டெபாசிட் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது

தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆம் தேதி சோதனை நடத்தினர். 4 நாட்களாக இந்த சோதனை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனை குறித்த விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மின்வாரிய அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சோதனையில், வங்கி வைப்பு தொகை ரூ.360 கோடி, ஏரளமான ஆவணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.