4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க

4 தொகுதிகளுக்கு  பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க.

4 தொகுதிகளுக்கு  பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க.

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அதேபோல் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர்  அறிவித்தார்.மேலும் தமிழகத்தில்  நான்கு தொகுதிகள் காலியாக உள்ளது.

இந்நிலையில்  மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.

இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது .

சூலூர்- பொங்கலூர் நா.பழனிசாமி

அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி

திருப்பரங்குன்றம்- பி.சரவணன்

ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க .அதன்படி  திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி மணிமாறன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு  கே.என்.நேரு தலைமையில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு  பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.சூலூர் தொகுதிக்கு  எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.