தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains with thunder and lightning in Tamil Nadu, Pondicherry and Karaikal till the 8th.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வருகின்ற 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவின் தெற்கு பகுதிகளில் கடந்த ஜூன் 3ஆம் தேதி  தொடங்கியது. இதனால் கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் தென்மேற்கு மழை தீவிரமடைந்துள்ளது. மேலும் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாட்டின் பிற மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று முதல் வருகின்ற 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.