தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

The Chennai Meteorological Department has forecast 5 days of rain in Tamil Nadu

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை , திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வருகின்ற  28 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.