கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு...!

5 Shaving Jewelry Loan - Tamil Nadu Government Action Order ...!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலானநகைக்கடன்தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதனால்,நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை கோரியது.

இந்நிலையில்,கூட்டுறவு வங்கிகளில் 5சவரனுக்குமேற்பட்டநகைக்கடன்பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது தெரிய வந்துள்ளது.இதனால்,விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி,ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் , 5 சவரனுக்கு அதிகமான நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.