சென்னையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு – மாநகராட்சி ஆணையர்

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், மழை தெண்ணீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..!
அதனபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நீர்நிலைகள், கடற்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், 2.43 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
மழையால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் மலையின் தாக்கம் குறையும் என நம்புகிறோம். அனைத்து தரப்பினரும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்கின்றனர். மழைப்பாதிப்பு குறித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025