நற்கருணை வீரர்களுக்கு மேலும் 5,000 வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில், சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக, சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட அறிவிப்பில், SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6-வது முறை பயணம் முதல், 50% கட்டணச் சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.