#Breaking: தமிழகத்தில் 3 மணி வரை 53.35 சதவீத வாக்குகள் பதிவு!

According to the Chief Electoral Officer, 53.35 percent of the votes were cast in Tamil Nadu as of 3 p.m.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 53.35 சதவித வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73 சதவீதமும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 41.58 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், சென்னையில் 48.49 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.