சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து 6 பேர் பலி 14 பேர் படுகாயம்

6 killed, 14 injured in Sivakasi firecracker blast The owner of the firecracker factory, Thangaraj, has been arrested.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 6 பேர் பலி 14 பேர் படுகாயம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.இந்த ஆலையில் நூற்றுக்கு  மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்பொழுது பட்டாசு தயாரிக்கும் பொழுது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது.இதனால் அருகிலிருந்த கட்டிடங்களுக்கு தீ பரவி 10க்கும் மேற்பட்ட அறைகள்  தரைமட்டம் ஆகியுள்ளன.

இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான நிலையில், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் நடக்கும் மூன்றாவது விபத்து இதுவாகவும்.இந்நிலையில் இந்த விபத்து காரணமாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் தங்கராசு கைது செய்யப்பட்டுள்ளார்.