“தமிழகத்தில் இதுவரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

7,525 crore rupees have been spent on corona prevention work in Tamil Nadu so far" - Chief Minister Palanisamy

தமிழகத்தில் இதுவரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் இதுவரை7,525கோடிரூபாய்கொரோனாதடுப்புபணிக்காகசெலவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில்,கொரோனாவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியதால் தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.