பட்டாசு வெடி விபத்தில் 8 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி – ஒருவர் உயிரிழப்பு

One person was death and several others were injured in an explosion while making firecrackers at home near Sivakasi.

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்குள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த திடீர் வெடி விபத்தில் பணியில் இருந்த சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார் என்றும் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பான விசாரணை நடத்தி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சிலர் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.