நாளை மறுநாள் 8-வது மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

The 8th mega vaccination camp will be held in Tamil Nadu next Sunday, the Minister of Health announced.

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு பிறகு டெங்கு பாதிப்பு குறையும் என தெரிவித்தார். அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 9,150ஆக உயர்ந்துள்ளது. கோவை மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 50 மாணர்வகள் சேர்க்க அனுமதி கிடைத்திருக்கிறது.

டெங்கு குறித்து மத்திய அரசின் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி சென்றுள்ளது. நீட் விலக்கு மசோத தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாளை சென்னையில் 750 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

unknown node