சென்னை, மூவரசம்பட்டு குளத்தில் உயிரிழந்த 5 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேற்று சென்னை, மூவரசம்பப்ட்டு பகுதியில், உள்ள குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின் போது 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பங்குனி உத்திர நாளன்று கோவில் விழாவில் நடந்த இந்த சோக சம்பவம் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையையும் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், முதல் நிகழ்வாக நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.