ஆக்ஸ்போர்டு, ஸ்டாண்போர்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு, ஸ்டாண்போர்டு, யேல் போன்ற பல்கலைக்கழகங்களை இந்தியாய்வில் நிறுவ தற்போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது .
அதன் முதற்படியாக, ஒப்புதல் வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக நாடாளுமன்றத்தில் அது சட்டமாக்கப்பட்ட பிறகு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ கட்டுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.