மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது.
மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.