மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.. ஓர் பார்வை..!

chennai central

Central Chennai தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 4-வது மக்களவை தொகுதியாக இருப்பது தான் மத்திய சென்னை. தலைநகர் சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதியில் ஒன்று தான் மத்திய சென்னை மக்களவை தொகுதி. கடந்த 1977-ல் உருவாக்கப்பட்ட மத்திய சென்னை மக்களவை தொகுதி இந்தியாவில் உள்ள சிறிய தொகுதிகளில் ஒன்றாகும்.

இந்த மத்திய சென்னை மக்களவை தொகுதி 12 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 மக்களவை தேர்தலைகளை சந்தித்துள்ளது.

2008ம் ஆண்டு மறுசீராய்வு:

இந்த சூழலில் 2008ஆம் ஆண்டில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் உருவாக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன், பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் இருந்தன. இதில் குறிப்பாக முதல் முறையாக 2014-ம் ஆண்டு தேர்தலில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் தான் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறை செய்யப்பட்டது.

READ MORE-  திருவள்ளூர் மக்களவை தொகுதி ..ஓர் பார்வை..!

சென்னையின் முக்கிய இடங்கள்:

மத்திய சென்னை மக்களவை தொகுதி சிறிய தொகுதிகளில் ஒன்றாக இருந்தாலும், சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான இடங்களை கொண்டுள்ளது. அதன்படி, முக்கிய ரயில் நிலையங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூர், மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், ஆர்பிஐ கிளை, சேப்பாக்கம் மைதானம், ராஜீவ்காந்தி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகள் உள்ளடக்கியுள்ளது.

இதனால் மாநிலம் மற்றும் மாநகரின் நிர்வாக ரீதியாக மத்திய சென்னை தொகுதி முக்கிய வாய்ந்தவையாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் இது முக்கியமான தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

குறையும் வாக்காளர்கள் எண்ணிக்கை:

மத்திய சென்னை மக்களவை தொகுதி முக்கியமான தொகுதியாக இருந்து வரும் நிலையில், அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் இருந்து வருகிறது. குடிசை பகுதி மக்கள் வெளியேறியதன் காரணமாகத்தான் வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

திமுக கோட்டை:

மத்திய சென்னை மக்களவை தொகுதியை பொருத்தவரை இது திமுகவின் கோட்டை என்றே கூறப்படுகிறது. அதன்படி அங்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக, 8 முறையும், காங்கிரஸ் கட்சி இரு முறையும், அதிமுக மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. 1980, 1984 ஆகிய ஆண்டுகளிலும் மற்றும் 1996ஆம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த தொகுதி திமுக வசமே இருந்தது வருகிறது.

READ MORE- திருவண்ணாமலை மக்களவை தொகுதி ..ஓர் பார்வை..!

விஐபி தொகுதி:

இதனாலே மத்திய சென்னை திமுகவின் கோட்டை என அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் முக்கிய தலைவர்களான கலாநிதி, முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய சென்னையில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், பல பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் என ஸ்டார் வேட்பாளர்கள் நின்ற தொகுதியாகவும் இருக்கிறது. இதனால் மத்திய சென்னை தொகுதி ஒரு விஐபி தொகுதியாகவும் கருதப்படுகிறது.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009ல் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில் திமுகவின் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். மீண்டும் அவருக்கு 2019 ஆம் ஆண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கணிப்பு:

மத்திய சென்னை மக்களவை தொகுதியை பொறுத்தவரை அதிக முறை திமுக வசம் இருந்து வருவதால், மீண்டும் ஒருமுறை அவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படலாம். இதனால், இம்முறையும் மத்திய சென்னை தொகுதியில் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

2019 தேர்தல் முடிவுகள் :

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, மத்திய சென்னை தொகுதியில், திமுக தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். அதன்படி, திமுக வேட்பளர் தயாநிதி மாறன் 4,48,911 வாக்குகள் பெற்று பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம் பவுல் 1,47,391 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 301,520 வாக்குகள் விதியசத்தில் மூன்றாவது முறையாக வென்றார்.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் :

தொகுதிகள் வெற்றி தோல்வி
வில்லிவாக்கம் அ. வெற்றியழகன் (திமுக)
ஜே.சி. டி. பிரபாகர் (அதிமுக)
எழும்பூர் (தனி) ஐ. பரந்தாமன் (திமுக )
ஜான்பாண்டியன் (அதிமுக )
துறைமுகம் சேகர் பாபு (திமுக)
வினோஜ் பி செல்வம் (பா.ஜ.க)
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் (திமுக )
ஏ. வி. ஏ. கஸ்ஸாலி (பாமக )
ஆயிரம் விளக்கு எழிலன் நாகநாதன் (திமுக)
குஷ்பூ (பா.ஜ.க )
அண்ணா நகர் எம். கே.மோகன் (திமுக)
எஸ்.கோகுல இந்திரா (அதிமுக)

வாக்காளர் எண்ணிக்கை:

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தம்
664076 678658 433 1343167

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW