தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு… ‘ChatGPT’ பற்றிய தமிழக அரசின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!

கோவையில் அரசு தரப்பில் இம்மாதம் தொழில்முனைவோருக்கு ஒருநாள் சாட் ஜிபிடி பயிற்சி வழங்கப்படுகிறது.

chat gpt- tn govt

சென்னை :  கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான “ChatGPT” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு வரும் 31.01.2025 தேதி நடைபெற உள்ளது.

இந்த வகுப்பில் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்

ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப கற்றுக்கொள்ளுங்கள்.

தெளிவான இலக்கு நிர்ணயம்: ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள்.

மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்.

கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் Al கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும், ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

நேரடி சிக்கல் தீர்வு: இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், ChatGPT மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கவும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் வந்து அணுகலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய  எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 8072 799 983, 90806 09808

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin