குளத்தில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

அரியலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தைச் சேர்ந்த குமார் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இரு குழந்தைகள் மகள் பிருந்தா,மகன் கிரிதரன். இவர்கள் இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள குளத்திள் குளிக்க சென்றுள்ளார்கள். குளிக்கும் பொழுது அங்கு ஆழமாக வெட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் வழுக்கி தம்பி நீரில் மூழ்கி உள்ளான். இதனைக் கண்ட பிருந்தா தம்பியை காப்பாற்ற முற்சித்துள்ளாள் ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி உள்ளனர்.
அந்த வழிய சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் இதனை கண்டதும் பேருந்தை நிறுத்திவிட்டு கத்துனதும் அக்கபக்கத்தினர் திரண்டு வந்து 2 பேரையும் குளத்தில் இருந்து மீட்டு பொன் பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள் ஆனால் அங்கே மருத்துவர்கள் யாரும் இல்லாதா காரணத்தினால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவ ஊழியர்களும் நீண்ட நேரம் போராடிய பிறகும் சிறுவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாதனால் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து போலீஸார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025