ஒரு சிறிய வதந்திதான் மிகப்பெரிய பிரச்சனைகளை சமூகத்தில் உருவாக்குகிறது – அமைச்சர் உதயநிதி பேச்சு

Minister Udhayanidhi stalin

ஒரு சிறிய வதந்திதான் மிகப்பெரிய பிரச்சனைகளை சமூகத்தில் உருவாக்குகிறது என மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். அவரது உரையில், இளைஞர்களை அதிகம் கொண்ட  நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் அதிகம் இளைஞர்களை கொண்ட 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. வெறும் எண்ணிக்கையின் என்ற அளவில் மட்டுமில்லாமல், இங்கு இருக்கின்ற இளைஞர்கள், இளம்பெண்கள் திறமைசாலிகள் மற்றும் தனித்துவம் மிக்கவர்களாக உள்ளனர்.

அதனால் தான் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு முற்போக்கு மற்றும் முதன்மை மாநிலமாக இயங்கி கொண்டிருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருக்கும். ஆனால், என்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு விதி விலக்கு இல்லை. எல்லா துறையிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். மரம் நடுவதில் இருந்து, பேரிடர் மீட்பு பணி வரை என்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தான் முதலில் நிற்பார்கள்.

தமிழ்நாட்டை போதையேற்ற மாநிலமாக மாற்றுவது தான் முதலமைச்சரின் முதல் இலக்கு. போதைப்பொருள் ஒழிப்புக்காக மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறீர்கள், 75வது சுதந்திர தினம் கொண்டாட்டம், அரசியல் அமைப்பு தினம், யோகா தினம், தூய்மை இந்தியா திட்டம் ஆகிவற்றிலும் நீங்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். என்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகலின் பங்களிப்பு மிக அதிக அளவில் உள்ளது என தெரிவித்தார்.

இப்படி பல்வேறு சமூக நலப்பணியில் ஈடுபட்டு வரும் நீங்கள், விளையாட்டுத்துறை அமைச்சராக நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார். கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்று, கல்விதான் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத அழிக்க முடியாத சொத்து. எனவே, நீங்கள் கல்வியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு பிடித்த விளையாட்டிலும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. AI, CHAT GPT உள்ளிட்ட  அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. சமூக வலைதங்களான ட்விட்டர் (எக்ஸ் தளம்), பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என உள்ளிட்ட தளங்களில் இல்லாத யாரும் இல்லை, ஒரு விஷயத்தையே, ஒரு பதிவையோ, ஒரு புகைப்படத்தையோ பார்க்கும்போது பகுத்தறிவு கொண்டு சிந்தித்து இது உண்மைதானா என்று யோசிக்க வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு சொல்லி உள்ளார். இதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

எந்த ஒரு செய்தியோ பகிர்வதற்கு முன்பு உண்மைதானா என்று உறுதி செய்தபின் பகிர்ந்துகொள்ளுங்கள், அப்பா அம்மா தவிர வேறு யார் என்ன சொன்னாலும், உடனே நம்ப வேண்டாம், எதிர்த்து கேள்வி கேளுங்கள். ஒரு சிறிய வதந்திதான் மிகப்பெரிய பிரச்சனைகளை சமூகத்தில் உருவாக்குகிறது. இதனால் பொறுப்புணர்வுடன் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில் வலியுறுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்