டெங்கு – பன்றிக்காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெங்கு – பன்றிக்காய்ச்சல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அதேபோல் தமிழக சுகாதாரத்துறை பதில் அளிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன்படி இன்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது.அதில் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு – 27 பேர் , டெங்கு காய்ச்சலுக்கு – 13 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.டெங்கு பாதிப்பால் 3,440 பேரும், பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 1,745 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது.
பின் விளக்கத்தை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை டெங்கு – பன்றிக்காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.