மதுரை கள்ளழகர் திருவிழாவை பார்க்க வந்த இளைஞர் கொலை.! 5 பேருக்கு கத்திக்குத்து.! 

மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர் மர்ம நபர்களால் இராமராயர் மண்டகப்படி அருகே  கொலை செய்யப்பட்டுள்ளார்.

Murder

மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர் மர்ம நபர்களால் இராமராயர் மண்டகப்படி அருகே  கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் உலகபுழ்பெற்ற சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான  கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் உலகெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்து இருந்தனர்.

அப்போது மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த ஒரு 23 வயது மதிக்கத்தக்க இளைஞரும் வந்துள்ளார். அங்கு கூட்டத்தில் சில மர்ம நபர்களால் கத்தி உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்களையும் அந்த மர்ம கும்பல் கத்தியால் தாக்கி அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

இந்த சம்பவமானது, இராமராயர் மண்டகப்படி அருகே நடந்துள்ளது. தகவலறிந்து  வந்த மதிச்சியம் போலீசார் உடலை கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சித்திரை திருவிழாவின் போது நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.