2020 கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்த இளைஞர்..!

கடந்த மாதம் 21-ம் தேதி "அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்" என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள

கடந்த மாதம் 21-ம் தேதி “அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் தலைப்புகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர்.

அதில் ஆழி, அரசாங்கம் உள்ளிட்ட தலைப்புக்கள் கொடுக்கப்பட்டது. இந்த கவிதை போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன்  மகன் சு.கதிர்வேல் கலந்துகொண்டார்.

இவர் 2020 தலைப்புகளுக்கானக் கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி கதிர்வேல் சாதனை படைத்தார். இந்த சாதனையை படைத்த  கதிர்வேல் பல கவிதைப் போட்டிகளில்கலந்துகொண்டு  வெற்றி பெற்றுள்ளார்.

மேலும்  சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மருத்துவம், மகத்துவம் என்ற குறும் படத்திற்காக மாநில அளவில் முதல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.