ஆவின் பால் 6 ரூபாய் விலையேற்றம்! எந்தெந்த கலர் எவ்வளவு விலை? முழு விவரம் உள்ளே!

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக  உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது .

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக  உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது .

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலைலிட்டருக்கு 6 ரூபாய்உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் .5 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

unknown node

இந்த விலையேற்றத்தின்படி,பசும்பாலில்கொள்முதல் விலை28ரூபாயில் இருந்து,32ரூபாயாகவும்,எருமை பாலின்கொள்முதல் விலை35ரூபாயில் இருந்து,41ரூபாயாகவும் உயர்த்தபட்டுள்ளது.

இதனால் பயனர்களுக்கு ஒருலிட்டருக்கு 6 ரூபாயும்,அரை லிட்டருக்கு 3 ரூபாயும்உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த வகை பால் எவ்வளவு விலை கீழே பாப்போம்.

நீலம்: அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர்17ரூபாயில் இருந்து 3 ருபாய் உயர்ந்து20ருபாயாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக18ரூபாய்50காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து21ரூபாய்50காசாக உள்ளது.

பச்சை: அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர்19ரூபாய்50காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து22ருபாய்50காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக20ரூபாய்50காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து23ரூபாய்50காசாக உள்ளது.

ஆரஞ்சு: அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர்21ரூபாய்50காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து24ருபாய்50காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக22ரூபாய்50காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து25ரூபாய்50காசாக உள்ளது.

மெஜந்தா: அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர்16ரூபாய்50காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து19ருபாய்50காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக17ரூபாயில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து20ரூபாயாக உள்ளது.