அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

AIADMK leadership announces removal of Virudhunagar West district youth wing deputy secretary from the party.

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு.

அதிமுகவில் இருந்து ராம்குமார் என்பவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கையில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட காரணத்தாலும் ஆர்.ராம்குமார் (விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

unknown node