கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை.

கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை.

தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை வரும் சூழ்நிலையில், தென் மாவட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக பேருந்து வசதிகளை செய்வதற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் 500 முதல் 1000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.