சீல் இல்லாத 12ஆம் வகுப்பு சான்றிதழ் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ்

Minister Anbil Mahesh informed that action will be taken regarding the lack of government seal of approval in the Class 12 certificate.

12-ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12-ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அரசின் அங்கீகார சீல் இல்லாததால் வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் என தகவல் வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.