நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் பாக்ய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே போட்டி நிலவியது .இதன் பின்னர் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது.அதில் தேர்தல் நடத்தலாம்,வாக்கு எண்ணிக்கைக்கு மட்டும் அனுமதி மறுத்து விட்டது.
unknown nodeஇந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்ற நடிகர் விஷால் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் வழக்கு நிலுவையில் உள்ளதால் வாக்குகளை என்ன அனுமதிக்க முடியாது என்றும் வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.