இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில்,இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வானதற்கு நடிகர் ரஜினிகாந்த தனது வாழ்த்து செய்தியை ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.அதில் ,மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார்.
unknown node