Gautami

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி..!

By

நடிகை கவுதமி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில்,  நடிகை கவுதமி  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

 

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023