வீராங்கனை பிரியா மரணம் – மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு..!

வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு.

வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றிற்கான ஆணையை வழங்கினார். மேலும், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், பணி மருத்துவ அதிகாரி, எலும்பியல் நிபுணர், வார்டு பணியாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.