"2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்" – முதல்வர் பழனிசாமி

Tamil Nadu Chief Minister Palanisamy has said that the AIADMK alliance will win the 2021 assembly elections

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும், தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று தமிழக முதல்வர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், 3வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்று கூறினார்.