இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால், சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி உள்ளது. தேர்தலை முன்னிட்டு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால், சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 04.30 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.